எம்.எஸ்.தோனிக்கு எதிராக எங்களது யுக்தி வெற்றி பெற்றால்... என்ன சொல்கிறார் எரிக் சைமன்ஸ்!

எம்.எஸ்.தோனிக்கு எதிராக பயிற்சியில் பயன்படுத்தப்படும் யுக்திகள் போட்டியின்போது உதவுவதாக எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.
எம்..எஸ்.தோனி
எம்..எஸ்.தோனி படம் | ஐபிஎல்

எம்.எஸ்.தோனிக்கு எதிராக பயிற்சியில் பயன்படுத்தப்படும் யுக்திகள் போட்டியின்போது உதவுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. ஹார்திக் பாண்டியா ஓவரில் எம்.எஸ்.தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது அணியின் வெற்றிக்கு உதவியாக அமைந்தது.

இந்த நிலையில், எம்.எஸ்.தோனிக்கு எதிராக பயிற்சியில் பயன்படுத்தப்படும் யுக்திகள் போட்டியின்போது உதவுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.

எம்..எஸ்.தோனி
ஷிவம் துபேவுக்கு பந்துவீச அஞ்சும் எதிரணிகள்: சிஎஸ்கே பயிற்சியாளர்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் எங்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தார்கள். ஆனால், எம்.எஸ்.தோனி களமிறங்கிய பிறகு ஸ்கோர் 206 ஆக மாறியது. ஒவ்வொரு முறையும் எம்.எஸ்.தோனி எங்களுக்கு ஆச்சரியத்தை அளித்துக் கொண்டே இருக்கிறார். அவர் வலைப்பயிற்சியில் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவருடைய ஆட்டம் நம்பமுடியாத விதமாக இருந்தது. எங்களது பந்துவீச்சு யுக்திகளை அவருக்கு எதிராகப் பயன்படுத்தி சோதனை செய்துகொள்வோம். அவருக்கு எதிராக எங்களது யுக்திகள் வெற்றி பெற்றால், கண்டிப்பாக போட்டியின்போது அந்த யுக்திகள் நன்றாக பலனளிக்கும்.

எரிக் சைமன்ஸ்
எரிக் சைமன்ஸ் படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

எம்.எஸ்.தோனி முழங்கால் காயத்தால் அவதிப்படுகிறார். ஆனால், அவர் அதனை பேட்டிங்கின்போது வெளிக் காட்டிக் கொள்ளவே இல்லை. வலியைப் பொறுத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் கடந்து வந்த மனிதர்களில் மிகவும் கடினமான மனிதர் எம்.எஸ்.தோனி. எப்படி ஒருவரால் வலியை வெளிக்காட்டாமல் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவரது காயங்கள் குறித்து எங்களுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. எங்களுக்கு எனக் கூறும்போது அவரது ரசிகர்களையும் சேர்த்துதான் நான் கூறுகிறேன் என்றார்.

எம்..எஸ்.தோனி
அணியின் தோல்விக்கு தனிநபரை குறைகூறுவது சரியல்ல: கிரண் பொல்லார்டு

நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com