
மேற்கிந்தியத் தீவுகளை எங்களால் வீழ்த்த முடியும் என தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அண்மையில் அறிவித்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது கிடையாது. அதேபோல, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருதரப்பு டெஸ்ட் தொடரில் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 9 டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளை எங்களால் வீழ்த்த முடியும் என தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளை எங்களால் வீழ்த்த முடியும் என எங்களுக்குத் தெரியும். மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்த முடியும் என நம்புகிறோம். கரீபியன் தீவுகள் எனக்கு பிடித்தமான இடம். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகள் நிறைய கிரிக்கெட் வரலாற்றை உள்ளடக்கியுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது அந்த அணிக்கு உத்வேகம் அளித்திருக்கும். ஐசிசி கோப்பையை வெல்ல எந்த ஒரு அணியும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்.
தென்னாப்பிரிக்கா - மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடர் விவரம்
முதல் டெஸ்ட் - டிரினிடாட், (ஆகஸ்ட் 7 - ஆகஸ்ட் 11)
இரண்டாவது டெஸ்ட் - கயானா, (ஆகஸ்ட் 15 - ஆகஸ்ட் 19)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.