
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார்.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இன்று விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளார்.
வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக அணியில் ஜெஃப்ரி வாண்டர்சே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இலங்கை அணியில் மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா, துஷ்மந்தா சமீரா மற்றும் நுவான் துஷாரா ஆகியோர் அணியில் இல்லை. இந்த நிலையில், வனிந்து ஹசரங்கா தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.