ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வாஷிங்டன் சுந்தர்!

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வாஷிங்டன் சுந்தர்!
படம் | ஐசிசி
Published on
Updated on
2 min read

ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களில் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அந்த மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வாஷிங்டன் சுந்தர்!
பிரபல முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் காலமானார்!

ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான போட்டியில் இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன், இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்காட்லாந்து அணியின் சார்லி கேசல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து)

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாட இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார் கஸ் அட்கின்சன்.

அறிமுகப் போட்டியிலேயே கஸ் அட்கின்சன் தாக்கத்தை ஏற்படுத்தினார். அறிமுக டெஸ்ட்டில் அவர் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அடுத்தடுத்த போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசிய அட்கின்சன் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகவும் அவர் மாறினார். 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

வாஷிங்டன் சுந்தர் (இந்தியா)

பல ஆண்டுகள் விடாமுயற்சிக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி அண்மையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டார். இந்த தொடரில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வாஷிங்டன் சுந்தர்!
ஏமாற்றமாக இருக்கிறது, பேட்டிங் குறித்து ஆலோசனை இருக்கும்: ரோஹித் சர்மா

இலங்கைக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த டி20 தொடரிலும் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக செயல்பட்டார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற அவர் உதவினார். இலங்கைக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரை அவர் அபாரமாக வீசினார். சூப்பர் ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

சார்லி கேசல் (ஸ்காட்லாந்து)

ஜூலை மாதம் இங்கிலாந்தின் கஸ் அட்கின்சனுக்கு மட்டுமின்றி ஸ்காட்லாந்தின் சார்லி கேசலுக்கும் சிறப்பாக அமைந்தது. ஓமனுக்கு எதிராக அறிமுக ஒருநாள் போட்டியில் களம் கண்ட சார்லி கேசல் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடாவின் சாதனையை சார்லி கேசல் முறியடித்தார். ரபாடா அறிமுக ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வாஷிங்டன் சுந்தர்!
டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிரணி!

இவர்கள் மூவரில் ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com