ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பின், இலங்கைக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் முறையே செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்
டிம் சௌதி (கேப்டன்), டாம் பிளண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மாட் ஹென்றி, டாம் லாதம் (துணைக் கேப்டன்), டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க்கி, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.