ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசகராக செயல்பட விருப்பமா? ரிக்கி பாண்டிங் பதில்!

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.
ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்படம் | ஐசிசி
Published on
Updated on
1 min read

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமாக கிரிக்கெட் போட்டி 1900 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பிரிட்டன் அணி வெற்றி பெற்றது. அதன்பின், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடத்தப்படும் என ஒலிம்பிக் குழு தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் தெரிவிக்கப்பட்டது.

ரிக்கி பாண்டிங்
முதல் முறையாக உலக மகளிர் கபடி தொடர்!

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பேஸ்பால்-சாஃப்ட்பால், ஃபிளாக் ஃபுட்பால், லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளுடன் கிரிக்கெட்டும் நடத்தப்படும் என மும்பையில் நடைபெற்ற 141-வது சர்வதேச ஒலிம்பிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஒலிம்பிக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது: ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கான ஆலோசகர் பதவி உண்மையில் சிறந்த பதவி. அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் அதனை மறுக்கமாட்டேன். ஆனால், நிறைய பேர் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகர் பதவிக்கு ஆர்வம் காட்டுவார்கள். அதில் நானும் அங்கம் வகித்தால் நன்றாக இருக்கும். என்ன நடக்கும் என்பது யாருக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.