

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட் செயல்படவுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி லாகூரில் இன்று (ஜனவரி 29) நடைபெறுகிறது.
இந்த நிலையில், முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை டிராவிஸ் ஹெட் கேப்டனாக வழிநடத்தவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
வழக்கமான கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும், முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று அறிமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஹ்லி பியர்டுமேன், ஜாக் எட்வர்ட்ஸ் மற்றும் மேத்யூ ரென்ஷா அறிமுக வீரர்களாக ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேத்யூ ரென்ஷா மற்றும் ஜாக் எட்வர்ட்ஸ் இருவரும் பிக் பாஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஆவர். மேத்யூ ரென்ஷா பிரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும், ஜாக் எட்வர்ட்ஸ் சிட்னி சிக்ஸர்கள் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள். வேகப் பந்துவீச்சாளரான 20 வயதாகும் மஹ்லி பியர்டுமேன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் விவரம்
டிராவிஸ் ஹெட் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், மேத்யூ ரென்ஷா, கூப்பர் கன்னோலி, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், ஜாக் எட்வர்ட்ஸ், சேவியர் பார்ட்லெட், ஆடம் ஸாம்பா, மஹ்லி பியர்டுமேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.