பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

1/8: புதிய பயிற்சியாளர் வந்தபிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி!

இந்தாண்டில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி குறித்து...

Manchester United's coach Michael Carrick watches from the sideline during the Premiier League soccer match between Manchester United and Crystal Palace in Manchester, England, Sunday, March 1, 2026. (AP Photo/Dave Thompson)

ஆட்டத்தைக் கவனிக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய பயிற்சியாளர். - படம்: ஏபி

Published On :

புதிய பயிற்சியாளர் மைக்கேல் கேரிக் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு வந்த பிறகு முதல்முறையாக அந்த அணி ஒரு போட்டியில் தோல்வியுற்றுள்ளது.

மொத்தமாக ஏழு போட்டிகளுக்குப் பிறகு, எட்டாவது போட்டியில் மைக்கேல் கேரிக் தலைமையிலான மான்செஸ்டர் யுனைடெட் தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பிரீமியர் லீக் போட்டியில் அதிகமுறை கோப்பை வென்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி சமீபத்தில் மோசமான ஃபார்முக்குப் பிறகு, மீண்டெழுந்துள்ளது.

ரூபன் அமோரியம் நீக்கப்பட்ட பிறகு, இந்த அணிக்கு புதிய மேலாளராக மைக்கேல் கேரிக் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார்.

இவரது தலைமையில் யுனைடெட் அணி முதல் 8 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும், ஒரு டிராவும் கண்டிருந்த யுனைடெட் அணி, முதல்முறையாக ஒரு போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் நியூ கேஸில் கடைசி நேரத்தில் (90’) கோல் அடித்து, 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் யுனைடெட் அணிக்கும் கோப்பையை வெல்ல வாய்ப்பிருந்த நிலையில், இந்தத் தோல்வி பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும், புள்ளிப் பட்டியலில் யுனைடெட் அணி மூன்றாம் இடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தோல்வி குறித்து கேரிக், “நிச்சயமாக வருத்தமாக இருக்கிறது. இந்தத் தோல்வி வலிக்கிறது. வெற்றியடையாவிட்டாலும் இந்தத் தோல்வி வருத்தமளிக்கிறது. கடந்த போட்டிகளில் நன்றாக விளையாடி வந்தோம்.

பிரீமியர் லீக்கை வெல்ல இன்னும் அதிகமான போட்டிகளை வெல்ல வேண்டும். எங்களுக்கு முன்னதாக இரண்டு நல்ல அணிகள் இருக்கின்றன என்றார்.

ஆர்செனல் அணி 67 புள்ளிகளும் மான்செஸ்டர் சிட்டி 60 புள்ளிகளுடனும் மான்செஸ்டர் யுனைடெட் அணி 51 புள்ளிகளுடனும் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

Summary

Michael Carrick says first loss as Manchester United coach 'hurts'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.