87 ஆண்டுகால சாதனை முறியடிப்பு; 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்று வரலாறு படைத்த அல்கராஸ்!

நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை கார்லோஸ் அல்கராஸ் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்கராஸ்
ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்கராஸ்படம் | ஆஸ்திரேலிய ஓபன் (எக்ஸ்)
Updated on
1 min read

நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை கார்லோஸ் அல்கராஸ் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் இன்று (பிப்ரவரி 1) மோதினர். இந்தப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டியில் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார் அல்கராஸ்.

வரலாறு படைத்த அல்கராஸ்

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், 4 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அல்கராஸ் படைத்தார்.

அனைத்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் கார்லோஸ் அல்கராஸ் 22 வயது மற்றும் 272 நாள்களில் வென்று வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்பாக, கடந்த 1938 ஆம் ஆண்டு பிரெஞ்ச் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றதன் மூலம், அனைத்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் இளம் வயதில் வென்ற வீரர் என்ற சாதனையை டான் பட்ஜ் தன்வசம் வைத்திருந்தார். இந்த சாதனையை டான் பட்ஜ் 22 வயது மற்றும் 363 நாள்களில் படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அல்கராஸ் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பாக, விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த கார்லோஸ் அல்கராஸ், இன்று ஆஸ்திரேலிய ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். மொத்தமாக அவர் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார்.

அனைத்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வெல்லும் 9-வது வீரர் என்ற பெருமை கார்லோஸ் அல்கராஸைச் சேரும். இதற்கு முன்பாக, நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால், ரோஜர் பெடரர் உள்பட 8 பேர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

Summary

Carlos Alcaraz has created a historic record as the youngest player to win all four Grand Slam titles.

ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்கராஸ்
டி20 உலகக் கோப்பை உருவான வரலாறு! 2007 முதல் 2024 வரை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com