விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News image

பென் ஸ்டோக்ஸ்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 4:27 pm

DIN

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உள்ளூர் போட்டியான தி ஹண்ட்ரட் தொடரில் விளையாடியபோது பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வேகமாக ரன் எடுக்க ஓடியபோது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் ஆகஸ்ட் 21 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தி ஹண்ட்ரட் தொடரில் சூப்பர் சார்ஜர்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங்கின்போது 2 ரன்களில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேற அவருக்குப் பதிலாக ஹாரி ப்ரூக் களம் கண்டார். போட்டி முடிவடைந்த பிறகு, பென் ஸ்டோக்ஸ் ஊன்றுகோல் வைத்து நடந்து வந்து வீரர்களிடம் கை குலுக்கினார்.

பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து பேசிய ஹாரி ப்ரூக், பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. அவருக்கு ஸ்கேன் செய்யப்பட உள்ளது. ஸ்கேன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வரும் என்றார்.

கடந்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.