வங்கதேசம், இங்கிலாந்து தொடர்களுக்கான அட்டவணையில் மாற்றம் செய்த பிசிசிஐ!
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான போட்டி நடைபெறும் இடங்களில் பிசிசிஐ மாற்றம் மேற்கொண்டுள்ளது.


வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கான போட்டி நடைபெறும் இடங்களில் பிசிசிஐ மாற்றம் மேற்கொண்டுள்ளது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தர்மசாலாவில் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் போட்டி குவாலியருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான போட்டி நடைபெறும் மைதானங்களிலும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜனவரி 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது சென்னை சேப்பாக்கத்தில் இரண்டாவது டி20 (ஜனவரி 25) போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டி20 போட்டி நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா மைதானத்தில் முதல் டி20 போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர, போட்டிகள் நடைபெறும் தேதிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளவிருப்பதால், ஜனவரி 25 ஆம் தேதி கொல்கத்தாவில் போட்டியை நடத்துவது கடினம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...