
ஐசிசி தரவரிசை வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இலங்கை வீரரும் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-2 என தொல்வியை தழுவியது. இது வரலாற்று தோல்வியாகவும் அமைந்தது.
இந்தத் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடினாலும் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் சிறப்பாக விளையாடினார். 157 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தரவரிசையில் 2ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
2,3,4ஆம் இடங்களில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி என வரிசையாக இருக்கிறார்கள்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் 101 ரன்கள் எடுத்து பதும் நிசாங்கா 8ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாபர் அசாம் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ஷுப்மன் கில்லை பின்னுக்குத் தள்ளி ரோஹித் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
இலங்கை வீரர் துனித் வெல்லாலகே 17 இடங்கள் முன்னேறியுள்ளார். நெதர்லாந்து வீரர் 10 இடங்கள் முன்னேறி 49ஆம் இடம் பிடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.