இளம் தடகள வீரர்களுக்கு நீரஜ் சோப்ரா கொடுத்த அறிவுரை!

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இளம் தடகள வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
Neeraj chopra
நீரஜ் சோப்ராபடம் | நீரஜ் சோப்ரா (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் இளம் தடகள வீரர்கள், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும் என ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியாவுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

Neeraj chopra
இந்த இலக்கை கடவுளிடமே விட்டுவிடுகிறேன்: நீரஜ் சோப்ரா

இந்த நிலையில், இளம் தடகள வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஒருவர் என்னை அவர்களது முன்மாதிரியாக (ரோல்மாடல்) எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கும்போது, அது சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது. விளையாட்டுத் துறையில் தங்களது பயணத்தைத் தொடங்குபவர்கள் அதிகம் வசதிகம் இல்லை என்பதை நினைத்து கவலைகொள்ளக் கூடாது. இருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி முழு மனதுடன் பயணத்தை தொடங்க வேண்டும்.

Neeraj chopra
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம் அரசுக்கு வைத்த கோரிக்கை!

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மிகவும் முக்கியம். நான் எனது பயணத்தை தொடங்கியபோது, பெரிய அளவிலான வசதிகள் எதுவும் இல்லை. இருப்பினும், நான் மகிழ்ச்சியாக பயிற்சி மேற்கொண்டேன். உங்களுக்கு எந்த அளவுக்கு வசதி இருக்கிறதோ அதிலிருந்தே உங்களது பயணத்தைத் தொடங்குங்கள். நீங்கள் மிகப் பெரிய வெற்றியாளராக மாறும் காலம் வரும் என்றார்.

ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com