பிரபல கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கில் ஹேக் செய்யப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரான்ஸை சேர்ந்த 25 வயதான கால்பந்தாட்ட வீரர் கிளியன் எம்பாப்பே இதுவரை 331 கோல்களை அடித்துள்ளார். 158 கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.
எம்பாபே தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என பலமுறை கூறியுள்ளார்.
எம்பாப்வேயின் எக்ஸ் கணக்கில் மெஸ்ஸியை குறித்து கிண்டல் செய்தும் ரொனால்டோவை புகழ்ந்தும் பதிவுகள் வந்தன. மான்செஸ்டர் சிட்டியை கிண்டல் செய்தும் பதிவுகள் வந்தன. இதனால் மெஸ்ஸி ரசிகர்கள் மிகுந்த வருத்தமடைந்தனர்.
பின்னர்தான் கிளியன் எம்பாப்பேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்தது. பின்னர் அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டன.
ஹேக் செய்யப்பட்ட பிறகு மெஸ்ஸியை கிண்டல் செய்தும் கிறிஸ்டியானோ ரொனால்டோவை புகழ்ந்தும் பதிவிட்ட பதிவுகளால் காலபந்தாட்ட ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழுந்தன.
பிஎஸ்ஜி அணியிலிருந்து சமீபத்தில்தான் ரியல் மாட்ரிட் அணிக்கு எம்பாப்பே மாறினார். நேற்று (ஆக.28) யுஇஎஃப்ஏ சாம்பியன் லீக் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.
36 கிளப் அணிகள் மோதும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் 8 போட்டிகள் விளையாடவிருக்கின்றன. இதில் 16 அணிகள் தேர்வுசெய்யப்பட்டு அதற்கு இடையேயான பிளே ஆப் ஆட்டங்கள் நடைபெறும்.