ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் 853 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோ ரூட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com