ஆல்ரவுண்டர் தரவரிசையில் முந்திய ஜோ ரூட்: பந்துவீச்சுப் பயிற்சியில் ஸ்டோக்ஸ்! 

இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பந்து வீச்சில் கவனம் செலுத்தவிருக்கிறார். 
ஆல்ரவுண்டர் தரவரிசையில் முந்திய ஜோ ரூட்: பந்துவீச்சுப் பயிற்சியில் ஸ்டோக்ஸ்! 


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசவில்லை. ஜோ ரூட் பேட்டிங், பௌலிங்கில் அசத்திவருகிறார். இதன்மூலமாக ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜோ ரூட் பென் ஸ்டோக்கினை முந்தியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், “நாளை நான் பந்து வீசுவதை பார்ப்பீர்கள். இந்த தொடர் எனக்கு பௌலிங் போடுவதற்கான வாய்ப்பாக பார்க்கிறேன். குறைவான தாக்கம் தருமாறு நாளை பந்து வீசிப் பார்ப்பேன். எனது உடல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்து தொடர்ந்து பந்து வீசுவேன். 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விசாகப்பட்டினத்தில் நான் பந்து வீசமாட்டேன். பௌலிங் போடாமல் இருப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் நிச்சயமாக மீண்டும் பௌலிங் போட முயற்சித்து வருகிறேன். எனது பௌலிங் அணிக்கு உதவிகரமாக இருக்குமெனத் தெரியும். ஆனால் பேட்டிங் எளிமையாக இருப்பதால் பெரிதாக பயிற்சி தேவைப்படுவதில்லை. 

அறுவை சிகிச்சைக்கு முன்னமே இதை செய்வேனா தெரியவில்லை. எனது உடல் இயக்கம் குறித்து சிந்தித்து வருகிறேன். எனது முட்டி இப்போது சரியாக இருப்பதாகவே நினைக்கிறேன். இதற்காக மறுவாழ்வு மையத்துக்கு போகத் தேவையில்லை. முடிந்தவரை எல்லாம் சரியாக சிறப்பாக செயல்பட நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

ஜோ ரூட் தன்னை ஆல் ரவுண்டர் வரிசையில் முந்திவிட்டதால் பென் ஸ்டோக்ஸ் இந்த முடிவு எடுத்ததாக சமூக வலைதளத்தில் ஜாலியாக கிண்டல் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com