பௌலராக ஆரம்பித்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை அபாரமான பேட்டிங் திறமையினால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்கிறார் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.
பொதுவாக நீண்ட வருடங்களாக நம்பர் 4இல் விளையாடி வந்த ஸ்மித் வார்னர் ஓய்வு பெற்ற பிறகு தொடக்க வீரராக விளையாடுகிறார்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் வரலாறு படைத்த 12த் ஃபெயில் இயக்குநரின் மகன்!
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் குறைவான ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித்தை பலரும் விமர்சித்தார்கள். இவருக்கு தொடக்கத்தில் பேட்டிங் சர் வராது என்றார்கள். ஆனால் இரண்டாவது டெஸ்டில் அசத்தினார்.
2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. தோற்றாலும் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்தார். நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தது ஆஸி.
இது குறித்து ஸ்மித் நேர்காணல் ஒன்றில், “2,3 இன்னிங்ஸில் நான் சரியாக விளையாடதபோது பல்வேறு விமர்சனங்கள் வந்தன. இரண்டு முறை ஆட்டமிழக்காமல் குறைவான ரன்களை அடித்துள்ளேன். தற்போது திடக்க வீரராக சராசி 60 வைத்துள்ளேன். எனக்கு இது குறித்து கவலையில்லை. எங்கு விளையாடினாலும் அது வரிசை மட்டுமே. நான் பல முறை புதிய பந்தில் விளையாடி இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்து ஆஸி.-மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார்.