முகமது ஷமி அணியில் இல்லாதது  தாக்கத்தை ஏற்படுத்துமா? முன்னாள் இந்திய வீரர் பதில்!

முகமது ஷமி அணியில் இல்லாதது தாக்கத்தை ஏற்படுத்துமா? முன்னாள் இந்திய வீரர் பதில்!

முகமது ஷமி அணியில் இல்லாதது பும்ராவின் பணிச்சுமையை அதிகரித்திருந்தாலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்

முகமது ஷமி அணியில் இல்லாதது பும்ராவின் பணிச்சுமையை அதிகரித்திருந்தாலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு  காயம் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அயர்லாந்துக்கு எதிரான டி20  தொடரில் இந்திய அணியுடன் இணைந்தார். உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டதால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. 

இந்த நிலையில், முகமது ஷமி அணியில் இல்லாதது பும்ராவின் பணிச்சுமையை அதிகரித்திருந்தாலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இர்பான் பதான் பேசியதாவது: இந்திய அணியில் முகமது ஷமி இல்லாதது கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அவர் அணியில் இல்லாததால் பும்ராவுக்கு  காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இந்திய அணியில் ஷமி மற்றும் பும்ரா இணை சிறப்பாக பந்துவீசி எதிரணிக்கு சவால் அளிக்கக் கூடியவர்கள். பும்ரா விக்கெட் எடுக்கும்போது அவருக்கு உறுதுணையாக ஷமி பந்துவீசுவார். ஷமி விக்கெட் எடுக்கும்போது பும்ரா அவருக்கு உறுதுணையாக பந்துவீசுவார். டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார் என்றார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 2) முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com