
இந்திய அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது மிகப் பெரிய விஷயம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தி அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணியை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தது மிகப் பெரிய விஷயம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இரண்டாவது இன்னிங்ஸில் பதற்றமாக இருந்தேன்: ஷுப்மன் கில்
இது தொடர்பாக போட்டி முடிவடைந்த பிறகு பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இலக்கை துரத்திப் பிடிப்போம் என்ற முழுநம்பிக்கை எங்களுக்கு இருந்தது. அதிக ரன்களை துரத்திப் பிடிக்க வேண்டும் என்கின்ற அழுத்தமான சூழலே இங்கிலாந்து அணியை பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட வைத்துள்ளது. இதுபோன்ற மிகப் பெரிய ஸ்கோரை துரத்தும்போது ஒரு அணியாகவும், தனி நபராகவும் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம். எங்களது பேட்டிங் திருப்திரமானதாகவே இருந்தது. பேட்ஸ்மேன்களின் பேட்டிங் அணுகுமுறைக்கு நான் எந்த அறிவுரையும் கூறப்போவதில்லை. இந்தியாவை நாங்கள் அதிகப்படியான அழுத்தத்தில் வைத்திருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அனுபவமிக்க வீரர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டனர் என்றார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ராஜ்கோட்டில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.