
கடந்த சில போட்டிகளாக பெரிய ஸ்கோர் அடிக்காதது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் சதமடித்து அசத்தினார்.
இதையும் படிக்க: இங்கிலாந்தை வீழ்த்திய இளம் இந்திய அணி; ரோஹித் சர்மா பெருமிதம்!
இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக பெரிய ஸ்கோர் அடிக்காதது இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும்போது பதற்றத்தை ஏற்படுத்தியதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், நான் முதல் பந்தை சந்திக்கும்போது எனது இதயத் துடிப்பு எவ்வாறு இருந்ததோ அதே அளவு கடைசி பந்து வரை இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது எனது இதயத் துடிப்பு ஒரே மாதிரியாக இருந்தது. அந்த அளவுக்கு நான் பதற்றமாக இருந்தேன். இதுபோன்று ஒருபோதும் நான் இருந்ததில்லை. இந்த விஷயம் எனக்கு வித்தியாசமானதாக இருந்தது என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில் 104 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.