இங்கிலாந்தை வீழ்த்திய இளம் இந்திய அணி; ரோஹித் சர்மா பெருமிதம்!

இங்கிலாந்தை வீழ்த்திய இளம் இந்திய அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை வீழ்த்திய இளம் இந்திய அணி; ரோஹித் சர்மா பெருமிதம்!

இங்கிலாந்தை வீழ்த்திய இளம் இந்திய அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்ற  கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட்டில் விளையாடவில்லை. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை என விராட் கோலி அறிவித்தார். மூத்த வீரர்கள் இல்லாத இந்திய அணி இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்தியை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் இடம்பெற்றுள்ள 8 வீரர்கள் மொத்தமாகவே 68 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். அதில் 5 பேர் விளையாடிய டெஸ்ட் போட்டிகள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. 

இந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்திய இளம் இந்திய அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்தைப் போன்ற ஒரு அணிக்கு எதிராக இளம் இந்திய அணி செயல்பட்ட விதத்தை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வாலும், இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இளம் வீரர்கள் செய்யும் தவறுகளை சரிசெய்ய சிறிது காலம் எடுக்கும். இளம் வீரர்கள் எந்த ஒரு அழுத்தமுமின்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என விரும்பினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் எளிதாக இருக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரிந்தது. இன்னும் மூன்று போட்டிகள் மீதமிருக்கின்றன. மீதமுள்ள போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஜஸ்பிரித் பும்ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடினர். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சிறப்பானதாக இருந்தது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com