சக இந்திய பந்துவீச்சாளர்களை பின்னுக்குத் தள்ளிய ஜஸ்பிரித் பும்ரா: ஏபி டி வில்லியர்ஸ்

இந்திய அணியின் சக பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சக இந்திய பந்துவீச்சாளர்களை பின்னுக்குத் தள்ளிய ஜஸ்பிரித் பும்ரா: ஏபி டி வில்லியர்ஸ்

இந்திய அணியின் சக பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு ஐசிசியின் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவருக்குப் பெற்றுத் தந்தது. 

இந்த நிலையில், இந்திய அணியின் சக பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்பட்டதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா அற்புதமாக பந்துவீசுகிறார். அவரது அபார பந்துவீச்சுத் திறமையால் அணியில் உள்ள சக பந்துவீச்சாளர்களை அவர் பின்னுக்குத் தள்ளிவிட்டார். ஆனால், இந்திய அணியின் மற்ற பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறேன். அவர்கள் பெரிதாக விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், பும்ராவுக்கு உறுதுணையாக சிறப்பான  பந்துவீச்சினை வெளிப்படுத்தினர்.

கிரிக்கெட் என்பது தனிநபர் சார்ந்தது மட்டும் கிடையாது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஒருவர் விக்கெட் எடுக்கும்போது மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்கு உறுதுணையாக பந்துவீசுவது சிறப்பானது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட முடியாத மாதிரியான யார்க்கர்களை வீசினார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் யார்க்கர் பந்துகளையே அவர் ஆயுதமாகப் பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கிறார். டெஸ்ட் போட்டிகளிலும் அதனையே செயல்படுத்துகிறார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com