100வது சர்வதேச டி20யில் வார்னர் புதிய சாதனை!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புதிய சாதனை படைத்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி 7  விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். 3 சர்வதேசப் போட்டிகளிலும் தனது 100வது போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். 

சர்வதேச டி20-யில் 3,000 ரன்கள் எடுத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் டேவிட் வார்னர். 25 அரை சதங்கள், 1 சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பாக பின்ச் 3120 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டேவிட் வார்னர் 100வது சர்வதேச போட்டிகளில் அடித்த ரன்கள்: 

100வது டெஸ்டில் 200 ரன்கள் 
100வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் 
100வது டி20 போட்டியில் 70 ரன்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com