
ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரரான ஸ்பென்சர் ஜான்சன் கடந்த ஆண்டின் இறுதியில் துபையில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது சிறப்பானது. உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நாள்கள் உள்ளன. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் உள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.