வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இந்தியாவை திணறடித்த பென் டக்கெட்: இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்!

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 133 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 2:56 pm

DIN

இந்திய அணியின் சவலான பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் திறம்பட விளையாடியதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் பாராட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 133 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியின் சவலான பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் திறம்பட விளையாடியதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் பாராட்டியுள்ளார்.

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் டக்கெட் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக விளையாடினார். அவருக்காக இந்திய அணி ஃபீல்டிங்கில் மாற்றம் செய்வதும், அதற்கேற்ப டக்கெட் திறம்பட விளையாடி ரன்கள் குவிப்பதுமாக இருந்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை டக்கெட் திறம்பட எதிர்கொண்டார். அவருக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசுவது மிகவும் கடினம். அவர் ஒரு பந்தையும் விடமால் எதிர்கொள்வார். டக்கெட் இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.