அஸ்வின் திடீர் விலகல்; புதிய வீரர் சேர்ப்பு: ஐசிசி விதி சொல்வது என்ன?

அஸ்வின் திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அஸ்வின் திடீர் விலகல்; புதிய வீரர் சேர்ப்பு: ஐசிசி விதி சொல்வது என்ன?

அஸ்வின் திடீரென டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் ரவிச்சந்திரன் திடீரென விலகி உள்ளாா். இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதின் காரணமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி மீதமுள்ள ஆட்டத்தை 10 வீரா்களுடனே தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐசிசி விதியின்படி, வழக்கமாக வீரா் காயமடைந்தாலோ அல்லது கரோனா பாதிப்பு இருந்தால் தான் பதிலி வீரா்கள் அனுமதிக்கப்படுவா்.

அல்லது எதிரணியின் கேப்டன் சம்மதித்தால் மட்டுமே அஸ்வினைப் போல ஒரு ஆல் ரவுண்டரை அணியில் சேர்க்கலாம். அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்கலாம். அப்படி இல்லாதபோது ஃபீல்டிங் மட்டுமே செய்ய ஒரு வீரரை சேர்க்கலாம்.

இந்நிலையில் அஸ்வினுக்கு பதிலாக ஃபீல்டிங் மட்டுமே செய்ய தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com