இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் அஸ்வினின் புதிய உலக சாதனை!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்துள்ளார்.
ரவி அஸ்வின்
ரவி அஸ்வின்Ajit Solanki

இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவி அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக புதிய சாதனை படைத்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு டெஸ்ட்டில் அறிமுகமான அஸ்வின் சமீபத்தில் தனது 97-வது போட்டியில் 500-வது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப் படைத்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

ரவி அஸ்வின்
அறிமுகப் போட்டி: இங்கிலாந்தின் 3 டாப் ஆர்டர்களை வீழ்த்திய ஆகாஷ் தீப்!

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டியில் பெயர்ஸ்டோவின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

1000 ரன்கள், 100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் (23 போட்டிகளில்) அஸ்வின் இரண்டாமிடம் வகிக்கிறார். இதற்கு முன்பாக ஆஸிக்கு எதிராக இயான் போதம் 22 போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

Ajit Solanki

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com