தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்!

இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்.

News image
Updated On :23 பிப்ரவரி 2024, 7:44 am

DIN

இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ரிஹான் அகமது அணியில் இடம்பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இங்கிலாந்து திரும்புவதாகவும், மீதமுள்ள போட்டிகளில் அவர் அணியில் இடம்பெற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தனிப்பட்ட காரணங்களுக்காக ரிஹான் அகமது உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட வரமாட்டார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிஹான் அகமது 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.