இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனை படைத்த ஜோ ரூட்!

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
Published on
Updated on
1 min read

டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று (பிப்ரவரி 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்
சதமடித்து அசத்திய ஜோ ரூட்: முதல் நாளில் இங்கிலாந்து 302 ரன்கள் குவிப்பு!

இன்றையப் போட்டியில் ஜோ ரூட் அடித்த சதமானது இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த 10-வது சதமாகும். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்த வீரர்கள் (டெஸ்ட் போட்டிகளில்)

ஜோ ரூட், இங்கிலாந்து - 10 சதங்கள் (52 இன்னிங்ஸ்களில்)

ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலியா - 9 சதங்கள் (37 இன்னிங்ஸ்களில்)

கேரி சாபர்ஸ், மே.இ.தீவுகள் - 8 சதங்கள் (30 இன்னிங்ஸ்களில்)

விவ் ரிச்சர்ட்ஸ், மே.இ.தீவுகள் - 8 சதங்கள் (41 இன்னிங்ஸ்களில்)

ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலியா - 8 சதங்கள் (51 இன்னிங்ஸ்களில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com