
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 104.5 ஓவரில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடும் இந்திய அணியில் ரோஹித் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் உடன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்து சிறிது பாட்னர்ஷிப்பினை அமைத்தார்கள். ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். படிதார் 17, ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 12 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
தற்போது துருவ் ஜுரேல் 6 ரன்களுடனும் அஸ்வின் ரன்னேதுமின்றி களத்தில் விளையாடி வருகிறார்கள். 54 ஓவர் முடிவில் இந்திய அணி 171க்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.
இங்கிலாந்து சார்பாக ஷொயிஃப் பஷீர் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. இந்தப் போட்டி இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா என்பதால் முனைப்புடன் விளையாடி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.