சுயமரியாதையை இழந்தேன், ஆந்திரத்துக்காக ஒருபோதும் விளையாட மாட்டேன்: ஹனுமா விஹாரி

ரஞ்சிக் கோப்பையில் இனி ஆந்திர அணிக்காக விளையாடப் போவதில்லை என ஹனுமா விஹாரி அறிவிப்பு.
ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரி

ரஞ்சிக் கோப்பையில் இனி ஒருபோதும் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார்.

ரஞ்சிக் கோப்பையில் ஆந்திரம் காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசத்திடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், ஆந்திர அணியின் முன்னாள் கேப்டன் ஹனுமா விஹாரி ரஞ்சிக் கோப்பையில் இனி ஒருபோதும் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் எனக் கூறியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

ஹனுமா விஹாரி
இப்படி ஆட்டமிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்: ஷுப்மன் கில்

இது தொடர்பாக ஹனுமா விஹாரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஆந்திர அணிக்காக ஒருபோதும் விளையாடக் கூடாது என முடிவெடுத்துள்ளேன். அந்த அணியில் எனது சுயமரியாதையை இழந்து விட்டேன். எனக்கு ஆந்திர அணியைப் பிடிக்கும். நாங்கள் ஒவ்வொரு சீசனிலும் வளர்ந்து வருகிறோம். ஆனால், ஆந்திர கிரிக்கெட் அமைப்பு நாங்கள் வளர்வதை விரும்பவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

ரஞ்சிக் கோப்பையின் முதல் போட்டிக்குப் பிறகு ஆந்திர அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஹனுமா விஹாரி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஆந்திர அணிக்காக ஒருபோதும் விளையாட மாட்டேன் என விஹாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹனுமா விஹாரி
இளம் வீரர்களுக்கு அறிவுரை தேவையில்லை: ரோஹித் சர்மா

தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியது குறித்து ஹனுமா விஹாரி கூறியதாவது: பெங்காலுக்கு எதிரான முதல் போட்டியின்போது அணியை கேப்டனாக வழிநடத்தினேன். அப்போது வீரர் ஒருவரிடம் கோபமாக கத்தினேன். அந்த வீரர் அவரது அரசியல்வாதி தந்தையிடம் என்னைப் பற்றி முறையிட்டுள்ளார். அதனால் ஆந்திர கிரிக்கெட் அமைப்பு என்னைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. என்னுடைய தவறு ஏதும் இல்லாதபோதிலும் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினேன். அந்த தருணத்தில் எனது சுயமரியாதையை இழந்தேன். இருந்தும், கிரிக்கெட் மீது கொண்ட அன்பினால் ஆந்திர அணிக்காக இந்த சீசன் முழுவதும் ஒரு வீரராக விளையாடினேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com