நானாக ஆசைப்பட்டு டி20யிலிருந்து ஓய்வை அறிவிக்கவில்லை: மனம் திறந்த முஷ்ஃபிகுர் ரஹிம்!

பிரபல வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் தானாக விரும்பி டி20களில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம்
வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம்படம்: வங்கதேச கிரிக்கெட், எக்ஸ்

பிரபல வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் தானாக விரும்பி டி20களில் இருந்து ஓய்வை அறிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

வங்கதேச அணி விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செப்.4,2022 ஆம் ஆண்டு அறிவித்தார்.

ஆசியக் கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையிடம் தோற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து 35 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம் தனது ஓய்வை அறிவித்தார். 102 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 1500 ரன்களை எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 115. சராசரி 19.5.

“சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். வாய்ப்பு வரும்போது கிளப்தொடர்களில் விளையாட நான் தயாராக இருப்பேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாக" கூறியிருந்தார்.

வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம்
ஓய்வு பெற்ற பிறகும் ஃபீல்டிங் செய்த நீல் வாக்னர்!

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் நான் தானாக ஓய்வை அறிவிக்கவில்லை எனக் கூறியுள்ளார். அதில் அவர், “நான் ஓய்வை அறிவித்ததில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் டி20யில் நானாக ஆசைப்பட்டு ஓய்வை அறிவிக்கவில்லை. நான் ஓய்வு பெற்ற அந்த மாதத்தினை நினைவு கூறுங்கள். இதற்குமேல் எதையும் கூற விரும்பவில்லை.

பிபிஎல் தொடரில் தொடக்கத்தில் எங்களது பரிசல் (எஃப்பிஏ) அணியில் வயதானவர்களாக இருக்கிறார்கள். டி20களில் அனுபவம் வாய்ந்தவர்கள் தேவையில்லை என்றார்கள். இது தவறான எண்ணம். அனுபவம் எல்லா துறைகளிலும் முக்கியமானது. தற்போது நாங்கள் எங்கு இருக்கிறோம் பாருங்கள்.

வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம்
வெலிங்டன் டெஸ்ட்: இக்கட்டான சூழலில் சதமடித்த கேமரூன் கிரீன்!

எனது வயதினை வைத்து என்னை விமர்சிப்பதை நான் மோசமானதாக நினைக்கிறேன். ஃபிட்னஸில் தற்போதைய இளைஞர்களுடன் நான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை. வயதை வைத்தா அல்லது பர்பாமென்ஸை வைத்தா ஃபிட்னஸை முடிவு செய்வார்கள்? நல்ல உடல் நிலையும் நல்ல பர்பாமென்ஸும் இருக்கும்பட்சத்தில் வயது ஒரு காரணமே இல்லை. இல்லையேல் ஜிம்மி ஆண்டர்சன் போல் ஒருவர் கிடைப்பது அரிது.

நான் யாருக்கும் என்னை நிரூபிக்க விளையாடவில்லை. என்னை தேர்வு செயதவர்களுக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன். அதேசமயம், என்னை நம்பி எடுத்து எனது அணிக்காக (எஃப்பிஏ) எனது விளையாட்டு மூலம் அந்த நம்பிக்கையினை சரிசெய்ய முயல்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வங்கதேச பிரீமியர் லீக்கில் முக்கியமான ப்ளே- ஆஃப் போட்டியில் 38 பந்துகளில் 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார் முஷ்ஃபிகுர் ரஹீம். இறுதிப் போட்டி நாளை (மார்ச்.1) நடைபெறுகிறது. சிஓவி அணிக்கும் எஃப்பிஏ அணியும் இறுதிப் போட்டியில் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com