வெலிங்டன் டெஸ்ட்: இக்கட்டான சூழலில் சதமடித்த கேமரூன் கிரீன்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி 279/9 ரன்கள் எடுத்துள்ளது.
சதமடித்த மகிழ்ச்சியில் கேமரூன் கிரீன்
சதமடித்த மகிழ்ச்சியில் கேமரூன் கிரீன் Kerry Marshall

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி 279/9 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸி. 1-1 எனவும் ஒருநாள் தொடரில் 3-0 எனவும் டி20யில் 2-1 எனவும் வெற்றி பெற்றது.

அடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸி. 3-0 என அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நியூசி. உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பௌலிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்கள் ஸ்மித், கவாஜா முறையே 31, 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். லபுஷேன், டிராவிஸ் ஹெட் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்கள். கேமரூன் கிரீன் மட்டும் நிலைத்து நின்று ஆடி அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுத்தார். ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல் 16 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் கிரீன்.

சதமடித்த மகிழ்ச்சியில் கேமரூன் கிரீன்
ஓய்வு பெற்ற பிறகும் ஃபீல்டிங் செய்த நீல் வாக்னர்!

மிட்செல் மார்ஷ் 40 ரன்கள் எடுத்து கிரீனுக்கு உதவினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 85 ஓவர்களில் 279/9 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸி. ஸ்கோர் கார்ட் விவரம்:

ஸ்மித் 31,

கவாஜா 33,

லபுஷேன் 1,

கேமரூன் கிரீன் 103*,

டிராவிஸ் ஹெட் 1,

மிட்செல் மார்ஷ் 40,

அலெக்ஸ் கேரி 10,

மிட்செல் ஸ்டார்க் 9,

பாட் கம்மின்ஸ் 16,

நேதன் லயன் 5,

ஜோஷ் ஹேசில்வுட் 0*.

சதமடித்த மகிழ்ச்சியில் கேமரூன் கிரீன்
பிசிசிஐ மத்திய ஒப்பந்தம்: இஷான், ஷ்ரேயஸ் தவிா்க்கப்பட்டனா்

நியூசிலாந்து அணி பௌலிங்:

மேட் ஹென்றி- 20 ஓவர்கள்- 4 விக்கெட்டுகள்

வில்லியம் ரூர்கே- 20 ஓவர்கள்- 2 விக்கெட்டுகள்

ஸ்காட் குகெலீஜின்- 17 ஓவர்கள்- 2 விக்கெட்டுகள்

ரச்சின் ரவீந்திரா- 4 ஓவர்கள்- 1 விக்கெட்

டேரில் மிட்செல்- 4 ஓவர்கள்- விக்கெட் இல்லை

டிம் சௌதி- 20 ஓவர்கள்- விக்கெட் இல்லை

4 விக்கெட்டுகள் எடுத்த மேட் ஹென்றி உடன் நியூசி. வீரர்கள்
4 விக்கெட்டுகள் எடுத்த மேட் ஹென்றி உடன் நியூசி. வீரர்கள்Andrew Cornaga

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com