பிசிசிஐ ஒப்பந்தத்தில் நீக்கப்பட்ட ஷ்ரேயஸ், இஷான் கிஷன் மனம் தளரக்கூடாது: ரவி சாஸ்திரி அறிவுரை!

இந்தியாவின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஸ்ரேயஷ், இஷான் கிஷனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
ஷ்ரேயஸ் ஐயர், ரவி சாஸ்திரி, இஷான் கிஷன்.
ஷ்ரேயஸ் ஐயர், ரவி சாஸ்திரி, இஷான் கிஷன். கோப்புப் படங்கள்

இந்தியாவின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஸ்ரேயஷ், இஷான் கிஷனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியில் விளையாடும் வீரா்களுக்கு, ஆட்டத்துக்கான ஊதியம் தவிர, ஆண்டு ஊதியமும் வழங்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்டது. அதில், இஷான் கிஷண், ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் தவிா்க்கப்பட்டுள்ளனா்.

ஷ்ரேயஸ் ஐயர், ரவி சாஸ்திரி, இஷான் கிஷன்.
நானாக ஆசைப்பட்டு டி20யிலிருந்து ஓய்வை அறிவிக்கவில்லை: மனம் திறந்த முஷ்ஃபிகுர் ரஹிம்!

ஐபிஎல் போட்டிக்குத் தயாராவதற்காக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாமல் தவிா்க்கக் கூடாது என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவுறுத்தியது. ஆனால், முதுகுப் பகுதியில் பிரச்னை இருப்பதாகக் கூறி ஷ்ரேயஸ் ஐயா் ரஞ்சி கிரிக்கெட்டை தவிா்த்துள்ளாா். மறுபுறம் இஷான் கிஷணும் ரஞ்சியில் விளையாடாமல் டிஒய் பாட்டீல் டி20 போட்டியில் விளையாடி வருகிறாா்.

தேசிய அணியில் விளையாடாதபோது, உள்நாட்டு போட்டிகளில் களம் காண்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் இஷான் மற்றும் ஷ்ரேயஸை இந்த ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சோ்க்கவில்லை எனத் தெரிகிறது.

ஷ்ரேயஸ் ஐயர், ரவி சாஸ்திரி, இஷான் கிஷன்.
ஓய்வு பெற்ற பிறகும் ஃபீல்டிங் செய்த நீல் வாக்னர்!

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது எக்ஸ் பக்கத்தில், “கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதுதான் விளையாட்டு உணர்வை அதிகரிக்கும். தலையை உயர்த்துங்கள் ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷன். அழாமாக தேடுங்கள், சவாலை சந்தியுங்கள், முன்னதை விடவும் வலுவாக மீண்டு வாருங்கள். உங்களது முந்தைய சாதனைகள் அதிக பேசப்படுகின்றன; நீங்கள் மீண்டும் வெல்லுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com