டெஸ்ட் கிரிக்கெட்டை கண்டுகொள்ளாததாக ஐசிசியை விளாசும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்!

ஐசிசி மற்றும் உலகின் முக்கிய கிரிக்கெட் வாரியங்களும் டெஸ்ட் போட்டிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை கண்டுகொள்ளாததாக ஐசிசியை விளாசும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்!

ஐசிசி மற்றும் உலகின் முக்கிய கிரிக்கெட் வாரியங்களும் டெஸ்ட் போட்டிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முக்கிய வீரர்களின்றி தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்து செல்லவுள்ளதையடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அவர்களுக்கு கவலையில்லை. தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்களின்றி அந்த அணி நியூசிலாந்து சென்றால், நான் சொல்வது கண்டிப்பாக நடக்கும். நான் நியூசிலாந்தில் இருந்தால், இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாட மாட்டேன். முக்கிய வீரர்களின்றி விளையாடும் போட்டி எதற்காக என்று புரியவில்லை.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு அவர்கள் உரிய மதிப்பளிக்காதபோது எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழியும் தருணம் ஆரம்பித்துவிட்டதா எனக் கேட்கத் தோன்றுகிறது. கண்டிப்பாக, ஐசிசி மற்றும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்கள் பலரும் உள்ளூரில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளதால் அவர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார்கள் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com