இலங்கை - ஜிம்பாப்வே இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.
ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் மழையால் முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 8) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இலங்கை அணி. 13 ஓவர்களில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாகியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.