தோனியிடம் கற்றுக் கொண்டதை செயல்படுத்த விரும்புகிறேன்: ஷிவம் துபே

டி20 போட்டிகளில் தனது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி என இந்திய வீரர் ஷிவம் துபே தெரிவித்துள்ளார். 
தோனியிடம் கற்றுக் கொண்டதை செயல்படுத்த விரும்புகிறேன்: ஷிவம் துபே

டி20 போட்டிகளில் தனது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி என இந்திய வீரர் ஷிவம் துபே தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். 

இந்த நிலையில், டி20 போட்டிகளில் தனது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்துக்கான காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி என இந்திய வீரர் ஷிவம் துபே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் ஷிவம் துபே பேசியதாவது: நான் பேட்டிங் செய்ய வந்தபோது, தோனியிடம் இருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். தோனியிடன் நான் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பேன். வித்தியாசமான சூழ்நிலைகளை எப்படி அணுக வேண்டும் என அவர் கூறியுள்ளார். எனது பேட்டிங் தொடர்பாக இரண்டு, மூன்று அறிவுரைகளை எனக்கு வழங்கினார். என்னுடைய பேட்டிங் திறனையும் அவர் மதிப்பிட்டார். அவர் தொடர்ந்து எனது பேட்டிங் திறனை மதிப்பிட்டால், நான் தொடர்ந்து நன்றாக விளையாடுவேன் என நினைக்கிறேன். தோனி எனது பேட்டிங் திறனை மதிப்பிட்டு அறிவுரை வழங்கியதால் எனது நம்பிக்கை அதிகரித்தது என்றார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஷிவம் துபே ஆட்டநாயன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com