ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை குறித்துப் பேசிய ராகுல் டிராவிட்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை குறித்துப் பேசிய ராகுல் டிராவிட்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகனாக ஷிவம் துபே தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் இருப்பதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு பல காரணங்களுக்காக பல்வேறு வீரர்கள் அணியில் விளையாட வைக்கப்பட்டனர். ஆனால், டி20 உலகக் கோப்பை இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள இந்த நேரத்தில் இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் நிறைய தெரிவுகள் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இளம் வீரர்கள் தங்களது திறமையை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெளிப்படுத்தியுள்ளனர். வேறு எந்தெந்த துறைகளில் இந்திய அணியின் பலம் கூட்டப்பட வேண்டும்  என்பதில் கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்குப் பிறகு அணி வீரர்கள் அனைவரும் ஒன்றாக செயல்படும் வாய்ப்பில்லை. ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடும் விதத்தை கவனித்து அவர்களுக்கான இடங்கள் தேர்வு செய்யப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com