டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இந்த இரண்டு ஆல்ரவுண்டர்களும் வேண்டும்: ஆகாஷ் சோப்ரா

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இந்த இரண்டு ஆல்ரவுண்டர்களும் வேண்டும்: ஆகாஷ் சோப்ரா

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடர் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் ஷிவம் துபே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்களை பதிவு செய்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருவரும் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் ஷிவம் துபே சிக்ஸர்கள் அடித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. அவரது சிக்ஸர் அடிக்கும் திறன் அந்த இரண்டு போட்டிகளில் தெரிந்தது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியாவை சேர்க்காமல் ஷிவம் துபேவை சேர்க்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருவருமே சேர்க்கப்பட வேண்டும் என நான் கூறுவேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளின் அடிப்படையில் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்படுவதற்கான கடும் போட்டியாளரே. ஐபிஎல் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க அவருக்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com