இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஜாகிர் கான்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 25 முதல் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேன் ஆகவும் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவர் போதுமான அளவிற்கு நம்பிக்கை அளித்து வருகிறார். அண்மையில் முடிவடைந்த உலகக் கோப்பை தொடரில் அவரது தலைமைப் பண்பை அனைவரும் பார்த்தோம். அவர் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார். டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது முதல் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சவாலான தருணங்களில் அவர் சதம் அடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com