
இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் ஜிம்பாப்வே அணி, பேட்டா் சிகந்தா் ராஸா தலைமையில் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
இம்மாதம் ஜிம்பாப்வே செல்லும் நடப்பு உலக சாம்பியனான இந்திய அணி, 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் அந்நாட்டு அணியுடன் விளையாடுகிறது. இந்தத் தொடா், வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கான ஜிம்பாப்வே அணி, பல இளம் வீரா்களுடன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவமிக்க பேட்டரான சிகந்தா் ராஸா அதற்கு கேப்டனாக்கப்பட்டுள்ளாா். எனினும் மூத்த வீரா்களான கிரெய்க் எா்வின், ஷான் வில்லியம்ஸ், ரையான் பா்ல் உள்ளிட்டோா் இந்த அணியில் சோ்க்கப்படவில்லை
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி விவரம்
அணி விவரம்: சிகந்தா் ராஸா (கேப்டன்), அக்ரம் ஃபாரஸ், பென்னட் பிரையன், கேம்பெல் ஜோனதன், சதாரா டெண்டாய், ஜாங்வி லூக், காயா இன்னசென்ட், மடாண்டே கிளைவ், மாதெவெரெ வெஸ்லி, மாருமானி டாடிவனாஷி, மசாகட்ஸா வெலிங்டன், மவுடா பிராண்டன், முஸாரபானி பிளெஸ்ஸிங், மையா்ஸ் டியன், நக்வின் அன்டும், கராவா ரிச்சா்டு, ஷும்பா மில்டன்.
5 டி20 போட்டிகள் விவரம்
முதல் போட்டி - ஜூலை 6
2-வது போட்டி - ஜூலை 7
3-வது போட்டி - ஜூலை 10
4-வது போட்டி - ஜூலை 13
5-வது போட்டி - ஜூலை 14
(அனைத்து போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகின்றன)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.