மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று (ஜூலை 8) அறிவிக்கப்பட்டுள்ளது.
மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி இன்று (ஜூலை 8) அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 7 முதல் தொடங்கவுள்ளது.

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
யுவராஜ் சிங் என்னை நினைத்து பெருமை கொள்வார்: அபிஷேக் சர்மா

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை இன்று (ஜூலை 8) அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், மேத்யூ பிரீட்ஸ்க், நண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, டோனி டி ஸார்ஸி, கேசவ் மகாராஜ், அய்டன் மார்கரம், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, டேன் பாட்டர்சன், டேன் பைட், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் கைல் வெரைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com