ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார்.
லண்டன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் நோவக் ஜோகோவிச் உடன் மோதவிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் காயம் காரணமாக விலகினார். இதனால் ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
இந்த அரையிறுதியின் மூலம் விம்பிள்டனில் 13ஆவது முறையாக அரையிறுதிக்கு அசத்தியுள்ளார். இதன்மூலம் ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜோகோவிச். 49ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் விம்பிள்டனில் 7 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியுடன் மோதுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.