
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பாகிஸ்தான் அணியில் பெரிய மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கடந்த சனிக்கிழமை (ஜூலை 6) வெள்ளைப் பந்து அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், மூத்த அணியின் மேலாளர் வாஹாப் ரியாஸ் ஆகியோர் உடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியான முடிவினை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வாளர்களான முன்னாள் டெஸ்ட் வீரர் வஹாப் ரியாஸ், அப்துல் ரஸாக் ஆகியோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி).
அப்துல் ரஸாக் ஆடவர், மகளிர் தேர்வுக்குழுவில் இருக்கிறார். வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் சீனியர் அணியினரின் தலைமை தேர்வாளராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிசிபி கூறியதாவது:
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்துல் ரஸாக், வஹாப் ரியாஸ் ஆகியோரது சேவை தேசிய தேர்வாளர்களின் குழுவுக்கு தேவையில்லை என்பதனை இன்றுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. இவர்களுக்கான மாற்று உறுப்பினர்கள் குறித்து விரைவில் அறிவிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களை ஏன் நீக்கினோம் என்பதற்கு குறிப்பிட்ட எந்தக் காரணத்தையும் பாக். கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. இந்த தேர்வுக்குழுவில் முகமது யூசூப், அசாத் ஷபீக் அப்படியே இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.