முதல் டெஸ்ட்: மே.இ.தீவுகளை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிக்கில் லூயிஸ் 27 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, காவேம் ஹாட்ஜ் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜேமி ஸ்மித் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேசன் ஹோல்டர் மற்றும் மோதி தலா 2 விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
250 ரன்கள் பின் தங்கிய நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...