21 ஆண்டின் வெற்றி ரகசியம், ஓய்வு எப்போது? மனம் திறந்த ஜோகோவிச்!

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஓய்வு குறித்து பேசியுள்ளார்.
நோவக் ஜோகோவிச்
நோவக் ஜோகோவிச்Alberto Pezzali
Published on
Updated on
1 min read

செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் 2003 முதல் டென்னிஸ் விளையாடி வருகிறார். இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

37 வயதாகும் ஜோகோவிச் 37ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார். விம்பிள்டனில் மட்டும் இது 10ஆவது இறுதிப்போட்டி. இதுவரை 7 முறை விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளார். ரோஜர் பெடரர் 8 முறை வென்று இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

அரையிறுதியில் முசேட்டியிடம் வென்ற பின் ஜோகோவிச் பேசியதாவது:

நோவக் ஜோகோவிச்
இந்தாண்டின் மிகச் சிறந்த ஞாயிற்றுக்கிழமை! விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து!

வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதை இப்போது பகிரமுடியாது. (சிரிக்கிறார்). உண்மையை சொல்ல வேண்டுமானால் வெற்றிக்கு எந்த ரகசியமும் இல்லை. குடும்பம், உணவு முறைகள், உடற்பயிற்சி, தூக்கம், நமது எண்ணங்களை எப்படி பார்த்துக்கொள்கிறோம் என பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் இதுவும் எளிமையான ஒன்றுதான். பலரும் கடின உழைப்பை சொல்லுவார்கள். ஆனால் நான் திறமையான உழைப்பை சொல்லுவேன்.

அல்கராஸ் தலைசிறந்த டென்னிஸ் வீரர். அவருக்கு சமநிலையான வாழ்க்கை அமைந்துள்ளது. மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அவரை சரியாக முன்னிருத்துகிறார். அவரது ஸ்டைல் மக்களுக்கு பிடித்திருக்கிறது. வருங்காலத்தில் இன்னும் நிச்சயமாக பல சாதனைகளை நிகழ்த்துவார். அதில் சந்தேகமில்லை. பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லுவார். ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நான் வெல்ல நினைக்கிறேன்.

நோவக் ஜோகோவிச்
செர்பியாவில் தலைக்குமேல் குண்டுகள் பறந்தன..! விம்பிள்டன் கனவு குறித்து ஜோகோவிச்!

நான் ஓய்வுபெற்ற பிறகு அவர் பட்டங்கள் வென்று கொள்ளட்டும் (சிரிக்கிறார்). நான் 50 வயதில் ஓய்வு பெற்றுக்கொள்வேன். இது நகைச்சுவைக்காகத்தான்(சிரிக்கிறார்). கடந்தாண்டு என்னை இங்கு 5 செட் த்ரில்லரில் வென்றார். அவர் எப்போது வேண்டுமானால் என்னை தோற்கடிக்கலாம். அல்கராஸ் ஒரு முழுமையான வீரர். நான் எனது முழு திறனையும் வெளிப்படுத்தி அல்கராஸை வெல்ல நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com