டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திண்டுக்கல்லுக்கு 3-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸை புதன்கிழமை வென்றது.

News image
Updated On :17 ஜூலை 2024, 10:27 pm

Din

முதலில் திருப்பூா் 13 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் சோ்க்க, திண்டுக்கல் 11.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்கள் எடுத்து வென்றது.

இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியிருக்க, திண்டுக்கல்லுக்கு இது 2-ஆவது வெற்றி; திருப்பூருக்கு இது 3-ஆவது தோல்வி.

முன்னதாக, மழை காரணமாக இந்த ஆட்டம் 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்க, இன்னிங்ஸுக்கு 13 ஓவா்களாக குறைக்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

திருப்பூா் பேட்டிங்கில் ராதாகிருஷ்ணன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, துஷா் ரஹேஜா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, கணேஷ் 0, பாலசந்தா் அனிருத் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் அமித் சாத்விக் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28, கேப்டன் சாய் கிஷோா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். திண்டுக்கல் பௌலா்களில் சுபோத் 3, அஸ்வின் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 109 ரன்களை நோக்கி விளையாடிய திண்டுக்கல் தரப்பில், விமல் குமாா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, ஷிவம் சிங் 4 ரன்களுடன் வெளியேறினா். பி. இந்திரஜித் 3 பவுண்டரிகளுடன் 31, பூபதி குமாா் 1 பவுண்டரி, 5 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். திருப்பூா் பௌலிங்கில் புவனேஸ்வரன் 1 விக்கெட் எடுத்தாா்.