இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
மகளிா் ஒற்றையரில், சிந்து 15-21, 21-15, 14-21 என்ற கேம்களில், சீன தைபேவின் வென் சி சுவிடம் 1 மணி நேரம் 10 நிமிஷங்கள் போராடித் தோற்றாா். அதிலேயே ஆகா்ஷி காஷ்யப்பும் 18-21, 6-21 என்ற கேம்களில், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனனிடம் 34 நிமிஷங்களில் தோற்றாா்.
மகளிா் இரட்டையா் பிரிவில், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா இணை 21-15, 21-15 என்ற கேம்களில், கனடாவின் ஜாக்கி டென்ட்/கிரிஸ்டல் லாய் இணையை 34 நிமிஷங்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றது.
எனினும், ருதுபா்னா பாண்டா/ஸ்வேதபா்னா பாண்டா ஜோடி 12-21, 9-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் கிம் சோ யோங்/காங் ஹீ யோங் கூட்டணயிடம் 36 நிமிஷங்களில் வீழ்ந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபலேவ் வெற்றி; டி மினாா் தோல்வி
பாா்சிலோனா ஓபன்: நோரி வெற்றி; ஒபெல்கால் தோல்வி

காலிறுதிச்சுற்றில் ஆயுஷ் ஷெட்டி - சிந்து, பிரணய் வெளியேற்றம்

ஆயுஷ் ஷெட்டி அபாரம்; சிந்து முன்னேற்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


