
நார்வே செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் கார்ல்சென் வென்று பட்டத்தை 6ஆவது முறையாக கைப்பற்றியுள்ளார். மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா ஆடவர் பிரிவில் 3ஆவது இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி முறையே 4,5ஆவது இடங்களைப் பிடித்தார்கள்.
நார்வேயின் பண மதிப்பில் 7 லட்சம் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்) முதலிடம் பிடித்த கார்ல்செனுக்கு வழங்கப்பட்டது. இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சத்து 60ஆயிரம் வழங்கப்பட்டது.
ஆடவர் பரிசுத் தொகை விவரங்கள்:
1.மேக்னஸ் கார்ல்சென் - ரூ.54,60,000
2. ஹிகரு நகமுரா - ரூ. 27,30,000.
3. ஆர். பிரக்ஞானந்தா - ரூ.15,60,000.
4. அலிரீஜா ஃபிரௌஸ்ஜா - ரூ.13,26,000
5. ஃபாபியோனா கரானா - ரூ. 11,70,000
6. டிங் லிரென் - ரூ. 9,36,000.
மகளிர் பரிசுத் தொகை விவரங்கள்:
1.வென்ஜுன் - ரூ.54,60,000
2.முஸிஜுக் - ரூ. 27,30,000.
3.லீ டிங்ஜி - ரூ.15,60,000.
4.வைஷாலி - ரூ.13,26,000
5.ஹம்பி - ரூ.11,70,000
6.கிராம்லிங் - ரூ. 9,36,000.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.