
உலகக் கோப்பை போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தானை சூப்பா் ஓவரில் வீழ்த்தியது அமெரிக்கா. முதலில் ஆடிய பாகிஸ்தான் 159 எடுக்க அடுத்து ஆடிய அமெரிக்காவும் 159 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவா் நடத்தப்பட்டது. சூப்பா் ஓவரை பாகிஸ்தானின் முகமது அமீா் வீச, அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது.
அமெரிக்கா அணியைச் சேர்ந்த சௌரப் நேத்ரவல்கர் வீசிய ஓவரில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் அசத்திய சௌரப் நேத்ரவல்கரின் லிங்டின் (linkedin) புகைப்படம் வைரலாகி வருகிறது.
2018இல் அமெரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே வேளையில் ஆரகள் நிறுவனத்தில் என்ஜீனியர் வேலையும் செய்து வந்திருக்கிறார். 2022வரை வெலை செய்துள்ளதாக அவரது லிங்க்ட் முகப்பு பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது.
மும்பையில் 1991இல் பிறந்தவர். 2010இல் இந்தியாவுக்காக யு-19இல் விளையாடியுள்ளார். 2015 அமெரிக்கா சென்ற இவர் தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் சாம்பியனை அறிமுக அணியான அமெரிக்கா வென்று சாதனைப் படைக்க உதவியுள்ளார்.
இவர் இந்திய அணிக்காக யு-19 போட்டியில் விளையாடும்போது அப்போதைய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் யு-19 உடன் தோல்வியுற்றார். அதற்கான பழிவாங்கலாக தற்போது பாபர் அசாம் தலைமையிலான அணியை வீழ்த்தியிருக்கிறார்.
மும்பையை சேர்ந்த இவர் ரஞ்சிக் கோப்பையிலும் விளையாடியிருக்கிறார். ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாட முயன்றிருக்கிறார். வாய்ப்பு மறுக்கப்பட்டதும் அமெரிக்கா சென்று தற்போது உலகக் கோப்பை வரை வந்து அசத்தியிருக்கிறார்.
இந்திய ரசிகர்கள் சௌரப் நேத்ரவல்கரை கூடுதலாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இவரைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.